விருதுநகர் நகரசபை கூட்டத்தில் மவுனம் காத்த கமிஷனர்

விருதுநகர் நகரசபை கூட்டத்தில் தலைவரே பதிலளிக்க வேண்டும் என்றும் கமிஷனர் பதிலளிக்க கூடாது என்றும் சுட்டி காட்டியதால் கமிஷனர் பதிலளிக்காமல் மவுனம் காத்தார்.

Update: 2022-09-30 19:05 GMT

விருதுநகர் நகரசபை கூட்டத்தில் தலைவரே பதிலளிக்க வேண்டும் என்றும் கமிஷனர் பதிலளிக்க கூடாது என்றும் சுட்டி காட்டியதால் கமிஷனர் பதிலளிக்காமல் மவுனம் காத்தார்.

நகரசபை கூட்டம்

விருதுநகர் நகரசபையின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் நகர சபை கூட்ட அரங்கில் தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தனலட்சுமி, கமிஷனர் ஸ்டான்லி பாபு, என்ஜினீயர் மணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு கமிஷனர் ஸ்டான்லி பாபு விளக்கம் அளித்தபோது கவுன்சிலர் ஆறுமுகம் விதிமுறைப்படி நகர சபை கூட்டத்தின் போது தலைவர்தான் பதிலளிக்க வேண்டுமே தவிர கமிஷனர் பதில் அளிக்க கூடாது என வலியுறுத்தினார்.

இதனை ஏற்றுக்கொண்ட கமிஷனர் தொடர்ந்து கூட்ட நடவடிக்கையின் போது மவுனம் காத்தார். இதனைத்தொடர்ந்து கூட்ட அரங்கில் இருந்த பிற நகரசபை அலுவலர்களும் வெளியேறினர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆஷா, முத்துலட்சுமி ஆகியோர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தும் அவர்களுக்கு உரிய பதிலளிக்காத நிலை இருந்தது.

கவுன்சிலர் ராஜ்குமார் தனது வார்டு பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமென அவையின் முன் பகுதிக்கு வந்து வலியுறுத்தினார். கவுன்சிலர் மதியழகன் மதுரை ரோட்டில் இருள் சூழ்ந்து இருப்பதாக புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய பதிலளிக்காத நிலை இருந்தது.

நிதி ஒதுக்கீடு

மாணிக்கம்தாகூர் எம்.பி. திமுக கவுன்சிலர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என கவுன்சிலர் மதியழகன் புகார் கூறியதற்கு காங்கிரஸ் கவுன்சிலர் பால்பாண்டி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறியதன் பேரில் மதியழகன் தான் கூறியதை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

கவுன்சிலர்கள் பேசுவதற்கான ஒலிபெருக்கி வசதி செய்யப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் கலையரசன் தகரத்தலான கூம்பு ஒலிபெருக்கிமூலம் பேசினார். கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டதுடன் பல தீர்மானங்கள் விவாதத்திற்குப்பின் நிறைவேற்றப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்