கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சம்பவம் எதிரொலி: மாமல்லபுரம் கடலில் குளித்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பிய போலீசார்

கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக மாமல்லபுரம் கடலில் குளித்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து போலீசார் அனுப்பினர்.

Update: 2022-11-28 09:45 GMT

கடலில் குளித்தனர்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்பு மதுராந்தகம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் பிறந்த நாள் கொண்டாட வந்தபோது, அவர்களில் 3 பேர் கடலில் குளித்தபோது ராட்சத அலையால் 100 மீட்டர் தூரத்திற்கு ஆழ்கடலுக்கு அடித்து செல்லப்பட்டனர்.

அவர்களை அங்குள்ள புகைப்பட கலைஞர்கள், மற்றும் குதிரை சவாரி ஓட்டும் நபர்களால் காப்பாற்றினர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் பொழுதை கழிக்க வந்திருந்தனர். நேற்று கடல் சீற்றம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்ததால் சுற்றுலா வந்தவர்களில் பலர் சில தினங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை அங்குள்ளவர்கள் எச்சரித்த பிறகும் அதை பற்றி பயம் கொள்ளாத அவர்கள கடலில் குளித்து கொண்டிருந்தனர்.

எச்சரித்து அனுப்பினர்

அப்போது மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் கடலில் குளித்து கொண்டிருந்தவர்களை கரைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். கரைக்கு வந்த அவர்களிடம், சில நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் கடலில் ராட்சத அலையால் அடித்து செல்லப்பட்டு 3 மாணவர்கள் மயிரிழையில் காப்பாற்றப்பட்டு உயிர் தப்பிய சம்பவத்தை அவர்களிடம் நினைவு கூர்ந்த இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் கடலில் குளிக்கும் எண்ணத்தை கைவிட்டு அமைதியாக அனைவரும் புராதன சின்னங்களை மட்டும் சுற்றி பார்த்துவிட்டு அவரவர்களின் வீட்டிற்கு பத்திரமாக செல்லுங்கள் என்று எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்