கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

வேட்டவலத்தில் கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-08 16:05 GMT

வேட்டவலம்

வேட்டவலத்தில் கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா வவ்வால் குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி சிவகாமி. இருவரும் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். 

இவர்களின் மகன் ரவி (வயது 19) திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் வ.ஊ.சி. தெருவில் உள்ள ஒரு வீட்டின் அறையில் நண்பருடன் தங்கி வேட்டவலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக ரவி சரிவர கல்லூரிக்கு செல்வதில்லை. இதனால் கடந்த 2-ந்தேதி அவருடன் தங்கியிருந்த மாணவர்கள் சிலர் பெங்களூருவில் உள்ள ரவியின் பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனையடுத்து ரவியின் தாய் சிவகாமி உறவினர் செல்வமணி என்பவருடன் ரவி தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். பின்னர் இவர்கள் ரவியுடன் கல்லூரிக்கு சென்று கல்வி கட்டணம் செலுத்திவிட்டு ரவியிடம் கல்லூரிக்கு தவறாமல் சென்று வரவேண்டும் என்று கூறினர். இந்தநிலையில் ரவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வேட்டவலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்