கல்லூரி பட்டமளிப்பு விழா

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2022-06-02 20:33 GMT

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி செயலர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கி பேசினார். தக்கலை நூருல் இஸ்லாம் நிகர்நிலை பல்கலைக்கழக இணை வேந்தர் பெருமாள்சாமி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக மொழியியல் துறை தலைவர் ராமராஜபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுந்தரம் வரவேற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி கலந்து கொண்டு 540 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் கோவிந்தானந்தா சுவாமிகள், உறுப்பினர் பூமிபாலகன், நிர்வாக அதிகாரி நடராஜன், முன்னாள் முதல்வர் முருகன் செட்டியார், கல்லூரி துறை தலைவர்கள் சண்முகசுந்தர நாச்சியார், பாக்கியமுத்து, அண்ணாத்துரை, ரவிசங்கர், விளையாட்டுத்துறை பழனிக்குமார், நூலகத்துறை பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை கல்லூரி ஆங்கில துறை தலைவர் ரவிசங்கர் தொகுத்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்