போளிப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் விளையாட்டு துறை மூலம் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு

போளிப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் விளையாட்டு துறை மூலம் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

Update: 2022-11-19 17:23 GMT

நெமிலி

போளிப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் விளையாட்டு துறை மூலம் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த போளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் பவித்ரா, கோமதி, லோகேஸ்வரி, அபி மற்றும் சைலஜா ஆகியோர் சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடிப் போட்டியில் பாரதி பெண்கள் கல்லூரியின் சார்பாக கலந்து கொண்டனர். 48 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர். இதன் மூலம் தமிழக அரசின் வேலைவாய்ப்பில் விளையாட்டு துறையின் கீழ் இடஒதுக்கீடு பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியர்கள், பயிற்சி ஆசிரியர் சுரேஷ் மற்றும் உடன் படிக்கும் சக மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்