கல்லூரி பஸ் திருட்டு

கல்லூரி பஸ் திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-10 17:36 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரபி (வயது 69). இவர் வந்தவாசியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பத்தில் உள்ள ஒரு டீ கடை பின்புறம் கல்லூரி பஸ்சை நிறுத்திவிட்டு ரபி சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த பஸ்சை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் ரோஷனை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த பஸ் செங்கல்பட்டு மணி கூண்டு அருகே நிற்பது தெரிந்தது. இதையடுத்து அந்த பஸ்சை போலீசார் மீட்டனர். தொடர்ந்து பஸ்சை திருடிச்சென்று செங்கல்பட்டில் விட்டுச்சென்றவர் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்