கோவில்பட்டி:
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் 57-வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள தாமோதரன் நினைவு கலையரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சாந்தி மகேஸ்வரி தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் கோதையம்மாள் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் இரா.பாஸ்கரன் கலந்துகொண்டு சமூகத்தில் மாணவர்கள் சிறந்தவர்களாக திகழ்வதற்கு நம்பிக்கையோடு அயராது உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்லூரி பருவ தேர்வில் முதல் 2 இடங்கள் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் கல்லூரி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கினார். விளையாட்டு போட்டிகளில் வணிகவியல் துறை மாணவ- மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை பெற்றனர். வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவர் பரத், கணிதவியல் துறை மாணவி சண்முகப்பிரியா ஆகியோர் தனிநபர் பிரிவில் சாம்பியன் பரிசை பெற்றனர்.
விழாவையொட்டி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது ஏற்பாடுகளை கல்லூரி செயலாளர் பா. மகேந்திரன் வழிகாட்டுதலின்படி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர். உதவி பேராசிரியர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.