காட்பாடி அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு காட்பாடி அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-29 15:28 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ந்தேதி மற்றும் 2-ந்தேதியில் வேலூர், காட்பாடி பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதனை முன்னிட்டு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தையும், மைதானத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி கவுன்சிலர் அன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்