தேசியக்கொடியை தலைகீழாக பிடித்திருந்த கலெக்டரின் உதவியாளர்
தேசியக்கொடியை கலெக்டரின் உதவியாளர் தலைகீழாக பிடித்திருந்தார்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிலை அலுவலர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிலை அலுவலர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏந்தியவாறு நின்றனர். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சம்பத், தேசிய கொடியை தலைகீழாக பிடித்தவாறு நின்றார். பின்னர் அருகில் இருந்தவர்கள் கூறியதை தொடர்ந்து, தேசிய கொடியை நேராக பிடித்தார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.