வெள்ளலூர் பகுதி சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
வெள்ளலூர் பகுதி சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
மேலூர்,
மேலூர் அருகே வெள்ளலூரில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வெள்ளலூர் ஊராட்சி மன்ற தலைவர் கவுசிகன், மேலூர் தாசில்தார் சரவணபெருமாள் உட்பட அரசு அதிகாரிகளும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மேலூர் நகராட்சியில் முதல் முறையாக 27 வார்டுகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. மேலூர் நகராட்சி தலைவர் முகமதுயாசின் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டு ராஜன், சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தெரு விளக்கு, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் மேல்நிலைத் தொட்டி வசதி, ரேஷன் கடை வசதி, அங்கன்வாடி கட்டிடம் ஆகிய வசதிகளை கேட்டு மனுக்களை நகர்மன்றத் தலைவர் முகமது யாசினிடம் பொதுமக்கள் வழங்கினர். இதில் அ.தி.மு.க. கவுன்சிலர் திவாகரன் தமிழரசன் மட்டும் அவரது வார்டு கமிட்டி குழுவில் பொதுமக்களை நியமிக்காமல் தி.மு.க.வினரை நியமித்ததை கண்டித்து கூட்டத்தை புறக்கணிப்பு செய்தார்.
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் 38 ஊராட்சிகள் உள்ளது. அதில் நேற்று 37 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. தனக்கன்குளம் ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு வருகிற 8-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருப்பதால் பகுதிசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக யூனியன் தேர்தல் பிரிவு அதிகாரி தெரிவித்தார்.