ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாமில் கலெக்டர், எம்எல்ஏ கலந்து கொண்டனா்.

Update: 2023-05-18 18:45 GMT

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, யால், லா.கூடலூர், அவிரியூர், பொற்பாலம்பட்டு, ஏந்தல் மற்றும் மையனூர் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் யால் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 552 மனுக்களை அளித்தனர். இதேபோல் ரிஷிவந்தியம், வெங்கலம், முட்டியம், மண்டகப்பாடி, பிரிவிடையாம்பட்டு, முனிவாழை, பாசார் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் முகாம் ரிஷிவந்தியம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் 739 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மாற்றுத்திறனாளி பயனாளிக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் சித்தால் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் 350 மனுக்களையும், சூளாங்குறிச்சியில் நடைபெற்ற முகாமில் 750 மனுக்களையும் பொதுமக்கள் அளித்தனர். முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரத்தினமாலா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜன், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜி, செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்