வல்லூர் அனல்மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் கலெக்டர் சந்திப்பு

வல்லூர் அனல்மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களை கலெக்டர் சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2023-03-10 11:36 GMT

மீஞ்சூர் அடுத்த வல்லூரில் தேசிய அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தில் 2,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பல வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வரும் நிலையில் சமூக ஊடகங்களில் வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற பொய்யான செய்திகள் பரப்பி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் தேசியமின் நிலையத்திற்கு நேற்று மாலை வந்து வடமாநில தொழிலாளர்களை சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்தார். அப்போது வட மாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆலோசனை வழங்கினார். அப்போது பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் அனல் மின் நிலைய அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்