குழந்தைகள் மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு

வடுகம்முனியப்பம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் மையத்தை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-07-27 18:45 GMT

ராசிபுரம்

கலெக்டர் ஆய்வு

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகம் முனியப்பம்பாளையம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தினை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் தொப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து தொப்பப்பட்டியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப்பதிவு முகாமை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விண்ணப்பங்களை பதிவு செய்யப்படும் பொழுது ஆவணங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

தென்னங்கன்று வழங்கினார்

இதனைத் தொடர்ந்து தொப்பம்பட்டி ஊராட்சியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் 15 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை கலெக்டர் உமா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் உதவி வேளாண்மை இயக்குனர் உமா, ராசிபுரம் தாசில்தார் சுரேஷ், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், பாலமுருகன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்