குமரியை பசுமை மாவட்டமாக மாற்ற இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதருடன் கலெக்டர் ஆய்வு

குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதருடன் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-02-18 21:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதருடன் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

நாகர்கோவில் அருகே சுசீந்திரம் பெரியகுளத்தில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ப்பெரி ஓ பாரல் மற்றும் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறியதாவது:-

தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக குப்பையில்லா மாவட்டமாக மாற்றுவது, பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்ப்பது, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து அவற்றில் இருந்து உரம் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

பசுமை மாவட்டமாக...

அதன் ஒரு பகுதியாக அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த 17-ந் தேதி ஆஸ்திரேலிய தூதர் ப்பெரி ஓ பாரல் மற்றும் சென்னையிலுள்ள ஆஸ்திரேலிய நாட்டின் துணை தூதர் சாரா கிரியோ ஆகியோருடன் குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் இந்தி்யாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ப்பெரி ஓ பாரல் சுசீந்திரம் பெரியகுளத்தையும், மணக்குடி பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மாங்ரோ மரக்கன்றுகளையும் நேரில் பார்வையிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் இளையராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) ரேவதி, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்