வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
நீடாமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
வளர்ச்சி பணிகள்
நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நீடாமங்கலம் பேரூராட்சியில் ரூ.70.79 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும், பூவனூர் ஊராட்சியில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் நபார்டு வங்கி நிதிஉதவி திட்டத்தின் கீழ் பூவனூர் ஊராட்சி முதல் பெரம்பூர் ஊராட்சி வரை கோரையாற்றின் குறுக்கே புதுப்பாலத்தின் அருகே சாலை அமைக்கப்பட்டுவருவதையும் திருவாரூர் மாவட்ட கலெக்டா சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.பின்னர் பெரம்பூர் ஊராட்சியில் ரூ.68.30 லட்சத்தில் முல்லைவாசல் கிராமம் முதல் பெரம்பூர் வரை சாலை அமைக்கப்பட்டு வருவதையும், பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மேலாளவந்தசேரி ஊராட்சியில் ரூ.39 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டுவருவதையும் கலெக்்டர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.
கலெக்டர் ஆய்வு
இதைப்போல அரிச்சபுரம் ஊராட்சியில் ரூ.42.50 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.3.88 லட்சம் மதிப்பில் அரிச்சபுரம் நடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பழுதுநீக்க பணிகளையும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.பின்னர் ரிஷியூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழக திருவாரூர் மண்டல நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.ஆய்வின் போது நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சோ.செந்தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், நமச்சிவாயம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் இருந்தனர்.