காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-19 08:17 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள எழிச்சூர் ஊராட்சியில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து ரூ.0.66 லட்சம் மதிப்பீட்டில், சமையலறை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணி, எழிச்சூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை தொட்டி, எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.65.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் ராஜராஜன் உடனிருந்தார். இதனை தொடர்ந்து ரூ.2.67 லட்சம் மதிப்பீட்டில் மதுவந்தாங்கலில் சிமெண்டு சாலை பணி, ரூ.4.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வடிகால் நீர் அமைப்பு பணி, ரூ.2.4 லட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி, எழிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீவித்யா ரஞ்சித்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முகமது ஜமீருதீன், எழிச்சூர் ஊராட்சி செயலர் ஸ்ரீகாந்த் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்