வல்லம் ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

வல்லம் ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தாா்.

Update: 2023-05-05 18:45 GMT


செஞ்சி, 

வல்லம் ஒன்றிய அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களை பார்வையிட்டார். மேலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் , பரிசீலனையில் உள்ள மனுக்கள் குறித்தும் கேட்டறிந்தார்.அப்போது பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் தாமதமின்றி தரமாக உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அப்போது, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, வல்லம் ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த தாஸ், சிலம்பு செல்வன் ஒன்றிய பொறியாளர்கள் ஜெயப்பிரகாஷ், உமாசங்கர், பரிமளா, பழனிச்சாமி, மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்