அரசு மகளிர் கலைக்கல்லூரி கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு

ஆலங்குளம் அரசு மகளிர் கலைக்கல்லூரி கட்டுமான பணியை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-04 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலைக்கல்லூரி கட்டுமான பணி மேற்கொள்ள ரூ.11 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவடையும் தருவாயில் இருந்து வருகிறது. மேலும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் கல்லூரியை வருகிற கல்வியாண்டிற்குள் புதிய கட்டிடத்துக்கு மாற்றி முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் கட்டுமான பணியை விரைந்து முடிக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணியை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் யூனியன் தலைவர் காவேரி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்