அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு அனுமதி பெற கால நீட்டிப்பு

அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு அனுமதி பெற கால நீட்டிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-03-17 18:45 GMT

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் (டி.டி.சி.பி.) எல்லைக்குள் 1.1.2011-க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையால் அனுமதி வழங்கும் திட்டத்தின்கீழ் வழிகாட்டு நெறிமுறைகள் 14.6.2018-ல் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 14.6.2018 முதல் 13.9.2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு சென்னை ஐகோர்ட்டு விதித்து இருந்த தடையை நீக்கி 10.2.2021 தேதி தீர்ப்பில் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவின்படி 22.3.2021 முதல் 4.4.2021 வரை 2 வார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் 6 மாத காலம் நீட்டிப்பு 24.6.2022 முதல் 31.12.2022 வரை அரசால் வழங்கப்பட்டது.

தற்பொழுது இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக 30.6.2023 வரை வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து அனுமதி பெற ராமநாதபுரம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தினை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்