ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு
ரேஷன் கடையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வாலாஜா நகராட்சி கச்சால நாயக்கர் தெருவில் உள்ள ரேஷன் கடையில், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று திடீர் ஆய்வுசெய்தார். அப்போது கடையில் உணவு பொருட்களின் தரம் மற்றும் இருப்பு அளவுகளை ஆய்வு செய்தார். தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.