மாணவர்கள் உதவித்தொகை பெறதபால் நிலையங்களில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

Update: 2023-03-22 19:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உதவித்தொகை பெற தபால் நிலையங்களில் கணக்கு தொடங்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தி உள்ளார்.

உதவித்தொகை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை கல்வி பயின்று வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவ இன மாணாக்கர்களுக்கு 2022 - 2023 -ம் கல்வியாண்டில் ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை புதிய மேம்படுத்தப்பட்ட மென் பொருளினை கொண்டு ஆன்லைன் மூலமாக வழங்கப்பட உள்ளது.

மாணவர்களது விவரங்கள் பள்ளி கல்வி துறை மூலமாக பாராமரிக்கப்பட்டு வரும் எமீஸ் தரவு தளத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது, மேற்கண்ட திட்டத்தில் கல்வி உதவித்தொகை அனுப்பி வைக்கும்போது வங்கியில் மாணவர்களது கை ரேகை பதிவு செய்து, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட அல்லது பெற்றோரது செல்போன் எண் தெரிவிக்கப்பட்டு, அதில் வரும் ஓ.டி.பி. தெரிவிக்கப்பட்டு வங்கி கணக்குடன் ஆதார் சீடிங் செய்யப்பட்டடு இருக்க வேண்டும்.

சிறப்பு முகாம்கள்

நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து அந்தந்த பள்ளிகளிலேயே மாணாக்கர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதால், இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாணாக்கர்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 8,860 மாணாக்கர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது, கடந்த 12 நாட்களாக பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 2,443 மாணாக்கர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 6,417 மாணாக்கர்களுக்கு வருகிற 25 -ந் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல் அருகிலுள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்