தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம்
தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.
நடையனூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 55). இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை.இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தென்னை மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் ஏராளமான தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.