பரமத்திவேலூர்
பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை சுதந்திர தின விழாவையொட்டி விடுமுறை என்பதால் தேங்காய் ஏலம் நடைபெறவில்லை. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 34 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.21.60-க்கும், சராசரியாக ரூ.23.49-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.23 ஆயிரத்து 828-க்கு ஏலம் நடைபெற்றது.