மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

Update: 2023-04-02 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகாவீர் ஜெயந்தி தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) மது விற்பனை இல்லாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதையொட்டி உள்ள பார்கள் மற்றும் தனியார் ஓட்டல்களில் செயல்படும் பார்கள் அனைத்தும் நாளை மூடப்படும். இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்