செண்பகத்தோப்பில் தூய்மைப்பணி
செண்பகத்தோப்பில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விருதுநகர் மத்திய புள்ளியியல் துறை துணை மண்டல அலுவலகத்தின் சார்பில் அதன் தலைவர் சேது மகேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கவும், அப்பகுதியை தூய்மைப்படுத்தவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன் பிறகு 2.0 திட்டம் தொடங்கப்பட்டு மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக்பைகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தினர்.