திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தூய்மை பணி
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தூய்மை பணி நடந்தது.;
மத்திய ரெயில்வே அமைச்சகம், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் ஆகியவை சார்பில் "ஒவ்வொரு பாதையும் சுத்தமான பாதையே" எனும் தூய்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நேற்று தூய்மை பணி நடந்தது. இதற்கு, திண்டுக்கல் ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
இதில் ஜி.டி.என். கலைக்கல்லூரி தேசிய பாதுகாப்பு படை மாணவர்கள் 50 பேர் திண்டுக்கல் ரெயில் நிலையத்தை சுத்தம் செய்தனர். அப்போது நடைமேடைகள், ரெயில் தண்டவாளங்களில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மை செய்தனர். இதில் தேசிய பாதுகாப்பு படை லெப்டினன்ட் பாண்டீஸ்வரன், ரெயில்வே சுகாதார ஆய்வாளர் சுரேஷ், வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.