கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவன் - திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;

Update:2023-12-01 07:34 IST

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பரதேசிப்பட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியை கத்தியால் குத்தியதை தடுக்க முயன்ற பாட்டியையும் சிறுவன் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளான். இதனால் மாணவியின் பாட்டிக்கும் காதில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன் மாணவி வீட்டில் சிறுவன் செல்போன் திருட முயற்சி செய்ததாகவும் அதனை கண்டித்ததால் ஆத்திரத்தில் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்