காவிரி ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் சாவு

மொளசி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-20 18:45 GMT

பள்ளிபாளையம்

11-ம் வகுப்பு மாணவர்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 45), ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் ஸ்ரீ கவுரிஷ் (16). இவன் எலச்சிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை ஸ்ரீகவுரிஷ் தனது நண்பர்கள் கோபி, சேஷாயி ஆகியோருடன் மொளசி அருகே உள்ள இறையமங்கலம் பகுதி காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.

அப்போது ஸ்ரீகவுரிஷ் திடீரென ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் போன் மூலம் அன்பரசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்பரசு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் உதவியுடன் ஆற்றில் இறங்கி தேடினர். நீண்ட தேடுதலுக்கு பிறகு மயங்கிய நிலையில் மாணவர் ஸ்ரீகவுரிஷை மீட்டனர்.

சாவு

இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக அவரை அங்குள்ள சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு மாணவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்ரீகவுரிஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அன்பரசன் மொளசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்