பொத்தேரி அருகே கல்லூரி மாணவர்களிடையே மோதல்

பொத்தேரி அருகே கல்லூரி மாணவர்களிடையே மோதல் நடந்தது.

Update: 2022-07-14 08:44 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பல்வேறு பட்டப் படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2 குழுக்களாக பிரிந்து ஒருவருரை ஒருவர் சரமாரியாக கை மற்றும் கற்களால் தாக்கி கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

மேலும் இந்த வீடியோவில் மாணவர்கள் இந்தியில் பேசியபடி அடித்துக் கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த சண்டையில் சில மாணவர்களின் சட்டை கிழிந்து உள்ளது. சில மாணவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதை கண்ட மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவம் குறித்து வீடியோ காட்சியின் மூலம் மாணவர்களை அடையாளம் கண்டு எதற்காக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் தைலாவரம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்