தமிழகத்தில் நாகரிகமான அரசியல் வளர வேண்டும்; யுவராஜ் பேட்டி
தமிழகத்தில் நாகரிகமான அரசியல் வளர வேண்டும் என கடையநல்லூரில் நடந்த விழாவில், தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் யுவராஜ் கூறினார்.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் நடந்த விழாவில், தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் யுவராஜ் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "தமிழகத்தில் சில கட்சிகள் பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக செயல்பட்டு வருகிறார்கள். அதற்கெல்லாம் உதாரணமாக தமிழகம் முதல் இந்தியா வரை இன்று செயல்படும் விதத்தை ஒட்டுமொத்த மக்களும் பார்க்கிறார்கள். ஆளுங்கட்சியினரும் அதை பார்க்கிறார்கள். தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகின்றன. ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் பொய்யான வாக்குறுதிகளாக உள்ளது.
ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு விமான நிலையம் திரும்பும்போது, நடைபெற்ற சம்பவம் துரதிஷ்டவசமானது. யாரும் இதுபோன்ற அநாகரிகமான அரசியலை செய்யமாட்டார்கள். தமிழகத்தில் நாகரிகமான அரசியல் வளர வேண்டும். அதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முன் உதாரணமான இயக்கமாக செயல்படும்.
கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் எங்கு பார்த்தாலும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது" என்றார்.
பேட்டியின்போது தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் அய்யாதுரை, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பூமாரியப்பன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.