பட்டா கேட்டு மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்

பட்டா கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.

Update: 2023-03-16 19:47 GMT

பொன்னமராவதி:

பொன்னமராவதி ஜெ.ஜெ.நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்கள், பட்டா வழங்க கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை திடீரென மறியலில் ஈடுபட முடிவெடுத்து, அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் எதிரே திரண்டு நின்றனர். இது பற்றி தகவல் அறிந்த பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் ரகுமான் தலைமையிலான போலீசார் மற்றும் தாசில்தார் பிரகாஷ், மண்டல துணை தாசில்தார் சேகர் உள்ளிட்ட வருவாய் துறையினர் அங்கு சென்று ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் பொதுமக்களிடம் தாசில்தார் பேசுகையில், ஜெ.ஜெ.நகர் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டு, இம்மாத இறுதிக்குள் பட்டா வழங்கப்பட உள்ளதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியல் முயற்சியை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்