சி.ஐ.டி.யு. ஆட்டோ டிரைவர்கள்- ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு. ஆட்டோ டிரைவர்கள்-ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-09 19:28 GMT

சி.ஐ.டி.யு. ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சார்லஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பா.ஜ.க. அரசு அறிவித்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது. ஆன்லைன் அபராதத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவுப்படி நியாயமான மீட்டர் கட்டணத்தை பேசி அமல்படுத்த வேண்டும். டெல்லி, மராட்டிய அரசைப்போல், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க வேண்டும். உயர்த்தப்பட்ட ஆட்டோ இன்ஸ்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி உறையூர் குறத்தெருவில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் கண்டன உரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்