பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

சங்கரன்கோவிலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

Update: 2023-09-26 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமியாபுரம் தெருக்களில் சாலை வசதி, மழை நீர் வடிகால் கேட்டு திருவேங்கடம் சாலையில் நேற்று பொதுமக்கள் கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணன் மற்றும் நகராட்சி ஓவர்சீயர் கோமதிநாயகம் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் சாலை வசதி, மழை நீர் வடிகால் ஆகியவை அமைக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்