கோபி, அந்தியூர் பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

கோபி, அந்தியூர் பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்;

Update:2023-04-10 02:49 IST

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த 3-வது நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஈஸ்டர் பண்டிகையான நேற்று கோபி மின் நகரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கோபி வட்டார கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆயர் சார்லஸ் டேனியல் இறை வார்த்தை வழங்கினார்.

இதேபோல் அந்தியூர், நகலூர், மைக்கேல்பாளையம், புதுப்பாளையம், அத்தாணி, சங்கராபாளையம், சந்தியபாளையம், பர்கூர், அத்தாணி, ஆப்பக்கூடல் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்