சூளைக்கரை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

சூளைக்கரை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-06-06 19:33 GMT

திருச்சி, வரகனேரியில் உள்ள சூளைக்கரை மாரியம்மன் கோவிலில் வைகாசி தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 23-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கிய இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் சிம்ம வாகனம், கமல வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம் என பல்வேறு வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதைத்தொடர்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்