அம்மன் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
அம்மன் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
விராலிமலை தாலுகா, பேராம்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கோவில் முன்பு அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து சொக்கப்பனை கொளுத்தினர். வடகாடு அருகே நெடுவாசல் மேற்கு பவளத்தாள்புரத்தில் உள்ள மகாகாளியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.