திருவாடானையில் இன்று தேரோட்டம்

திருவாடானையில் இன்று தேரோட்டம் நடக்கிறது.

Update: 2022-06-10 17:25 GMT

தொண்டி, 

திருவாடானையில் தமிழகத்தின் மிகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த மாதம் 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (சனிக்கிழமை) மதியம் 2 மணி அளவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சாமி-அம்மன் தேர் திரைச்சீலைகள் அலங்கரிக்கப் பட்டு தேரோட்டத்துக்கு தேர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்