கந்தர்வகோட்டை அருகே சின்னம்மாயி கல்லறை திருவிழா

கந்தர்வகோட்டை அருகே சின்னம்மாயி கல்லறை திருவிழாவில் மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள், இந்துக்கள் பிரார்த்தனை செய்தனர்.

Update: 2023-03-25 18:30 GMT

கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி சவேரியார் பட்டி கிராமத்தில் சின்னம்மாயி கல்லறை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான உணவு பஞ்சத்தின் போது சின்னம்மாயி தனது வீட்டிலிருந்து பானையில் கம்பங்கூழ், கஞ்சி போன்றவற்றையும் நெல், சோளம், தினை, கம்பு போன்ற தானிய வகைகளையும் பசியால் வாடிய மக்களுக்கு வழங்கி அவர்களின் பசியை போக்கினார். அவர் இறந்தபோது அவருக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்து அங்கு கல்லறை அமைத்தனர். அந்தப்பகுதி மக்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கும் பல்வேறு வேண்டுதல்களை சின்னம்மாயி நிறைவேற்றி தந்ததாக மக்கள் கூறிய நிலையில் சின்னம்மாயி இறந்த தினத்தை கல்லறை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி தச்சங்குறிச்சி சவேரியார் பட்டி பங்கு மூலம் திருப்பலி மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்துக்களும், கிறிஸ்தவ மக்களும் வந்து முதல் நாள் இரவு தங்கி சின்னம்மாயி கல்லறையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். மேலும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்