சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளிமாணவர்கள்மாநில, தேசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி

சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-10-15 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் விளையாட்டு போட்டி நடந்தது. இதில், நடந்த சைக்கிள் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலை பள்ளி பிளஸ்-2 மாணவர் சஞ்சய்காந்த் முதலிடமும், 9-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ் 3-ம் இடமும் பிடித்தனர். 13 வயதிற்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவில் 8-ம் வகுப்பு மாணவி ரித்திஷா3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

மாவட்ட அளவிலான குடியரசு தின விழா தடகள போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் பிளஸ்-2 மாணவர் அபிஷேக் வர்மா 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடமும், 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியா பள்ளிகள் விளையாட்டு குமுமம் சார்பில் காரைக்குடியில் நடைபெற்ற சாலை சைக்கிள் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர் அருள் 2-ம் இடமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர் சஞ்சயத்காந்த் முதலிடமும் பிடித்து தேசிய அளவில் நடைபெறும் சைக்கிள் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சில்லாங்குளம் முத்துகருப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும், பள்ளி தலைமை ஆசிரியருமான பாலமுருகன் கருப்பசாமி பாராட்டு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார். விழாவில் நிர்வாக கண்காணிப்பாளரும் சில்லாங்குளம் பஞ்சாயத்து தலைவருமான சரோஜாகருப்பசாமி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நிர்மலா பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்