அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

Update: 2022-11-14 18:45 GMT

பாப்பாரப்பட்டி.

இண்டூர் அருகே உள்ள இ.கே.புதூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் ஜெயா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மல்லிகா குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் ரங்கநாயகி, வட்டார தலைவர் மாது, வட்டார செயலாளர் சிவசக்தி, பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். அவர்கள் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

மேலும் செய்திகள்