சரக்கு ஆட்டோ மோதி குழந்தை பலி

பரமத்திவேலூர் அருகே சரக்கு ஆட்டோ மோதி 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2022-10-14 19:00 GMT

பரமத்திவேலூர்

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

4 வயது குழந்தை

பரமத்திவேலூர் தாலுகா, கொந்தளம் அருகே உள்ள வெங்கமேட்டுப்புதூரை சேர்ந்தவர் யுவராஜ். இவர்‌ பெட்ரோல் விற்பனை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது‌ மனைவி சங்கீதா. இவர்களது மகன் கவுசிக் (வயது 4).

இந்த நிலையில் நேற்று கவுசிக் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. திடீர் என குழந்தை கவுசிக் சாலையின் நடுவே ஓடியதாக தெரிகிறது.

சாவு

அப்போது கருக்கம்பாளையத்தில் இருந்து கொந்தளம் நோக்கி வந்த சரக்கு ஆட்டோ ஒன்று கவுசிக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த கவுசிக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை கவுசிக் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரக்கு ஆட்டோ மோதி குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்