ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட முதல்-அமைச்சர் வாய்ப்பு அளிப்பார்-திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு அளிப்பார் என திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

Update: 2023-01-06 18:45 GMT

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக தான் வாழ்ந்து வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கழிவுகளை கலந்தவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக கவர்னராக உள்ள ரவியை நீக்கிவிட்டு தமிழக பா.ஜனதா தலைவராக நியமிக்கலாம். அவருடைய கருத்தும் பேச்சும் அவ்வாறு தான் உள்ளது.

அ.தி.மு.க. குறித்த சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு தெளிவு பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தனி தமிழ்நாடு கோரிக்கை என்பது தற்போது தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் எழுப்பவில்லை. அண்ணா எழுப்பினார். பின்னர் அவர் தனது நிலையை மாற்றிக்கொண்டார். அதற்குப்பிறகு எந்த அரசியல் கட்சித்தலைவரும் தனி தமிழ்நாடு என்ற கோரிக்கையை எழுப்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்