பிரதமர் மோடியை சந்திப்பது ஏன்? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்

பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-03 06:31 GMT

சென்னை, 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அமைச்சர் உதயநிதி பிரதமர் மோடியை நாளை (வியாழக்கிழமை) சந்திக்கிறார். அப்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பிதழை வழங்க உள்ளார். மேலும் மத்திய விளையாட்டுத்துறை மந்திரியையும் சந்தித்து போட்டிக்கான அழைப்பிதழை வழங்குகிறார்.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

கேலோ இந்தியா போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பிதழை வழங்க பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி பெறுவது குறித்து கோரிக்கை வைக்கப்படும். வெள்ள சேதங்களை மத்திய நிதி மந்திரி பார்வையிட்டு சென்றிருக்கிறார். எனவே விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்று நம்புகிறேன். மேலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுப்பார். இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்