தங்கம் வென்ற ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தங்கம் வென்ற ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

Update: 2022-08-05 19:30 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

நெதர்லாந்து நாட்டில் அனைத்து நாடுகளை சேர்ந்த போலீசார்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 69 நாடுகளை சேர்ந்த 6 ஆயிரம் போலீசார் கலந்து கொண்டனர்.இதில் தமிழக காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமையில் 3 பெண் போலீசார் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 12 பேர் பங்கேற்றனர். இதில் 5 கிலோ மீட்டர் தூரம் வேகநடை போட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி 28 நிமிடங்கள் 59 நொடிகளில் வந்து முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் தமிழக போலீசார் 25 பதக்கங்களை வென்றனர்.இதனைதொடர்ந்து அவர்கள் தமிழகத்திற்கு வந்தனர். வெற்றி பெற்ற போலீசார் அனைவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஐ,ஜி.க்கள் முருகன், சம்பத்குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு. மூர்த்தி, ராஜன் ஆகியோரும் சாதனை படைத்த போலீசாைர பாராட்டினர்.


Tags:    

மேலும் செய்திகள்