வந்தவாசியில் சாலை பணியை தலைமை பொறியாளர் ஆய்வு

வந்தவாசியில் சாலை பணியை தலைமை பொறியாளர் செல்வன் ஆய்வு செய்தார்.

Update: 2022-11-05 13:36 GMT

வந்தவாசி நெடுஞ்சாலை சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்டத்தின் மூலமாக செய்யூர்-வந்தவாசி-சேத்துப்பட்டு-போளூர் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையுடனான இணைப்பு சாலை பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை தலைமை பொறியாளர் எம்.கே.செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கே.லஷ்மிநாதன் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

அதைத் தொடர்ந்து சேத்துப்பட்டு புறவழிச்சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது சாலையின் தரத்தை ஆய்வு செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்