சென்னை- வாரணாசி சிறப்பு ரெயில்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் கவர்னர் ஆர்.என். ரவி
முதல் சிறப்பு ரெயில் 216 பயணிகளுடன் இன்று புறப்பட்டது.
சென்னை,
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நாளை மறுநாள் காசி தமிழ்ச் சங்கமம் 2ம் ஆண்டு நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இதற்காக, இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து 7 சிறப்பு ரெயில்களில் ஆயிரத்து 500 பயணிகள் வாரணாசி செல்ல உள்ளனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட முதல் சிறப்பு ரெயிலை கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து அனுப்பி வைத்தார். முதல் சிறப்பு ரெயில் 216 பயணிகளுடன் இன்று புறப்பட்ட நிலையில் நாளை மறுநாள் அதிகாலை வாரணாசி சென்றடையும். டிசம்பர் 17ம் தேதி தொடங்கும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி டிசம்பர் 30 வரை வாரணாசியில் நடைபெறவுள்ளது.
இதனால்