சென்னை: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 40 சவரன் தங்கநகைகள் கொள்ளை
கொள்ளை தொடர்பாக அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சென்னை,
சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வருபவர் பத்மாவதி (62). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, பிளம்பிங் மற்றும் கதவுகளைச் சரிசெய்ய வந்ததுபோல் நடித்து அவரை திசை திருப்பி நகைகளை திருடியதாகத் கூறப்படுகிறது.
வீட்டை சுற்றிப்பார்ப்பதாக கூறி அவரது வீட்டில் இருந்த 40 சவரன் நகை திருடிச்சென்றதாக தெரிகிது. இந்த நிலையில், கொள்ளை தொடர்பாக அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.