தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா:மின் அலங்காரத்தில் தேரோட்டம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மின் அலங்காரத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-06 18:45 GMT

இளையான்குடி

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மின் அலங்காரத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

பங்குனி திருவிழா

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்துக்குட்பட்ட தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்த விழா கடந்த 29-ந்தேதி இரவு கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி காட்சியளித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மின் அலங்கார தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு மின் அலங்காரத்தில் தேர் அலங்கரிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி தேரில் காட்சியளித்தார். தொடர்ந்து இரவு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி இன்று(வெள்ளிக்கிழமை) பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அழகு குத்துதல், அங்கப்பிரசட்தணம், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை ஊஞ்சல் வைபவம் நிகழ்ச்சியும், இரவு பூ பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. நிறைவாக கோவில் தீர்த்த வாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

வரவேற்பு

கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார், அலுவலக பணியாளர்கள் தேர் திருவிழாவை காண வந்த பக்தர்களை வரவேற்றனர். இவர்களோடு இணைந்து தாயமங்கலம் ஊராட்சி தலைவர் மலைராஜ், துணைத்தலைவர் ராமன், உறுப்பினர்கள் செல்லம்மாள், அன்புக்கலைச்செல்வி, விக்டோரியா, அமுதா, இந்திரா, ஜெயராணி, முத்துலட்சுமி, புஷ்பம், ஊராட்சி செயலாளர் கீதா, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சரக மேற்பார்வையாளர் போஸ், திருவிழா குத்தகைதாரர் குரூப்ஸ், கண்ணுச்சாமி தேவர் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் குமரேசன், ஓ.பன்னீர்செல்வம். அணி ஒன்றிய செயலாளர் கனகராஜா, ஒன்றிய கவுன்சிலர் கீர்த்தனா கனகராஜா, மாதவன் நகர் குமார், இளையான்குடி உஷா டிரேடர்ஸ் பாலகுமார், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜான் ராஜைய்யா, முன்னாள் திருவிழா குத்தகைதாரர் ஜெயராமன், தாயமங்கலம் சமையல் காண்ட்ராக்டர் முத்துராமு என்கிற அருங்குளம், ரியல் எஸ்டேட் உரிமையாளர் சுரேஷ், இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், கூட்டுறவு வங்கி தலைவர் தமிழரசன், மாவட்ட தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சுப.அன்பரசன், மாவட்ட பிரதிநிதி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் ராஜபாண்டி, மாவட்ட பிரதிநிதி தட்சிணாமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர், நாகமுகுந்தன்குடி ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி பாலசுப்ரமணியன், தாயமங்கலம் கிளை செயலாளர் சத்தியேந்திரன், ஒன்றிய வர்த்தக அணி சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன், புக்குளி முருகேசன், காரைகுளம் ஊராட்சி தலைவர், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு ரவிச்சந்திரன், இளையான்குடி அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் பாரதிராஜன், தி.மு.க. மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பாச்சட்டி சேகர், கலைக்குளம் நீர் பாசன சங்க தலைவர் தமிழரசன் ஆகியோர் பக்தர்களை வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்