2 தபால் நிலையங்களில் பணி நேரம் மாற்றம்

தூத்துக்குடியில் 2 தபால் நிலையங்களில் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-14 18:45 GMT

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால்களை பொதுமக்களுக்கு குறைந்த செலவில் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையும் வகையில் தபால் அலுவலகங்களில் விரைவு மற்றும் பார்சல் சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் இரவு 7.30 மணி வரை பதிவு தபால்கள் மற்றும் பார்சல் புக்கிங் சேவைகளும், 8 மணி வரை விரைவு தபால்கள் புக்கிங் சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பொதுமக்கள் வசதிக்காக கூடுதலாக சில தபால் அலுவலகத்தில் பதிவு தபால் பெறுவதற்கு வசதியாக நேர மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி தபால் கோட்டத்துக்கு உட்பட்ட நியூ காலனி, போல்பேட்டை ஆகிய துணை தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கி வந்தன. இந்த தபால் நிலையங்களின் நேரம் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மாற்றப்பட்டு உள்ளது. இதனால் பதிவு, விரைவு மற்றும் பார்சல் தபால்கள் புக்கிங் செய்யும் வசதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்