சென்னையில் சில இடங்களில் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் போரூர் முதல் கத்திபாரா வரை உயர்த்தப்பட்ட வழித்தடத்திற்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது

Update: 2023-06-17 16:17 GMT

சென்னை,

சென்னை போக்குவரத்து துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் போரூர் முதல் கத்திபாரா வரை உயர்த்தப்பட்ட வழித்தடத்திற்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. மவுண்ட்-பூந்தமல்லி சாலை முகலிவாக்கத்தில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று (சனிக்கிழமை) முதல் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 11 மணிமுதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரை மெட்ரோ ரெயில் பணி மேற்கொள்ள ஏதுவாக கீழ்கண்டவாறு போக்கு வரத்து காவல் துறைசார்பாக அனுமதி வழங்கப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) இரவு 11 மணிமுதல் 19-ந் தேதி (திங்கட்கிழமை)காலை 5 மணிவரை. 24-ந்தேதி (சனிக்கிழமை இரவு 11 மணிமுதல் 26-6-2023 (திங்கட்கிழமை) காலை 5 மணிவரை. 1-7-2023 (சனிக்கிழமை) இரவு 11 மணிமுதல் 3-7-2023 (திங்கட்கிழமை) காலை 5 மணிவரை. 8-7-2023 (சனிக்கி ழமை) இரவு 11 மணி முதல் 10-7-2023 (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை. 15-7-2023 (சனிக்கிழமை) இரவு 11 மணி முதல் 17-07-2023 (திங்கட்கிழமை) காலை 5 மணிவரை. 22-7-2023 (சனிக்கிழமை) இரவு 11 மணிமுதல் 24-7-2023 (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை. மேற்கண்ட தினங்களில் கீழ்கண்டவாறு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


சென்னை பூந்தமல்லியில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் அனைத்து வணிக வாகனங்களும் மற்றும் கனரக வாகனங்களும் (அரசு பேருந்துகள் தவிர்த்து) போரூர் சுங்கச்சாவடி சர்வீஸ் சாலைவழியாக சென்னை புற வழிச்சாலை மூலம் அவர்களது இலக்கை சென்று அடையலாம். அனைத்து வணிக வாகனங்களும் சாலை வழியாக போரூர் நோக்கி செல்லும் மற்றும் கனரகவாகனங்களும் போரூர் சந்திப்பில் மாற்று பாதையில் ஆற்காடு சாலை வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம். குன்றத்தூரில் இருந்து போரூர் சந்திப்பு நோக்கி செல்லும் அனைத்து வணிக வாகனங்களும் மற்றும் கனரக வாகனங்களும் (அரசுபேருந்துகள் தவிர்த்து) மாற்றுபாதையில் போரூர் சந்திப்பில் ஆற்காடு சாலை வழியாகசென்று அவர்களது இலக்கை அடையலாம். சென்னை கத்திபாராவில் இருந்து போரூர் மற்றும் பூந்தமல்லி நோக்கிசெல்லும் அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (அரசு பேருந்துகள் தவிர்த்து) மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் மேற்கண்ட தினங்களில் மெட்ரோ ரெயில் பணி நடை பெறுவதால் அன்றைய தினம் இவ்வாகனங்களை உள்வட்ட சாலையில் கோயம்பேடு வழியாக இயக்குவதற்கு சாலை போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்